திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் முத்துப்பேட்டை அருகே போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுபட்டாக்கரை கிராமத்தில் சுமார்100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த கிராமத்திலேயே உள்ள ஒரு கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு,ஒரு குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியில் நிரப்பி தினமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வறட்சியான நேரமாக உள்ளதால், கிணறு மூலம் எடுக்கப்படும் போதுமானதாக இல்லை. அதிகளவில் தண்ணீர் உப்பாகவும் உள்ளது. எனவே, இங்கு குடிநீர்தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. சில தினங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்உமேஷ் பாபு தலைமையில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னார்குடி – முத்துப்பேட்டை வழித்தடத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள், போராட்ட குழுவின் சார்பில் கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், திமுக ஒன்றிய கவுன்சிலர் மோகன், விவசாய சங்க நிர்வாகிகள் கோவிலூர்ரவி, சிவசந்திரன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி – முத்துப்பேட்டை வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் முத்துப்பேட்டை அருகே போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: