என்னை ஆளாக்கிய பள்ளிக்கு வணக்கமுங்க… டிஜிபி நெகிழ்ச்சி

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்திருந்தார். அப்போது அவர் படித்த விளவங்கோடு பள்ளிக்கு சென்று பள்ளி முன்பு நின்று வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில், ‘வணக்கம், இதுநான் படித்த பள்ளி, அரசு உயர்நிலை பள்ளி விளவங்கோடு, குழித்துறை என்ற ஊரில் உள்ளது. நான் படிக்கும் போதும் இந்த போர்டு இருந்தது. நீங்கள் பார்க்கின்ற இந்த பில்டிங், இங்கு நான் நான்கு ஆண்டுகள் படித்துள்ளேன். அப்போது இது ஒரு டிரைனிங் ஸ்கூல், அதாவது ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பள்ளிக்கூடமாக இருந்தது.

அப்போது 2500 மாணவர்கள் இருந்தோம். கலகலப்பாக இருக்கும் இந்த பள்ளிக்கூடம், இங்கு தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பாக இருப்பார். ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த பள்ளிக்கூடம் தான் என்னை தமிழ்நாடு காவல்துறையின் தலைமை பதவிக்கு அழைத்து சென்றது. இந்த பள்ளிக்கூடத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இங்கு நான் வருவேன். பணியில் இருந்து ஓய்வுபெறக்கூடிய இந்த வேளையிலும் இந்த பள்ளிக்கூடத்தை ஒருமுறை நான் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையில் இங்கு வந்துள்ளேன். தாய் மண்ணே வணக்கம். அப்படி சொல்வது போன்று எனது பள்ளிக்கு வணக்கம்’ என்று தெரிவித்துள்ளார். டிஜிபியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post என்னை ஆளாக்கிய பள்ளிக்கு வணக்கமுங்க… டிஜிபி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: