குண்டும் குழியுமான படகு இல்ல சாலை

ஊட்டி : ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே இருந்து படகு இல்லம், முக்கோணம் வழியாக காந்தல் செல்ல சாலை உள்ளது. இச்சாலையில் சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் உள்ள படகு இல்லம் உள்ளது. இதனால் இச்சாலையில் எப்போதும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்வது வாடிக்கை. மேலும் காந்தல் வழியாக பிங்கர்போஸ்ட் சென்று அங்கிருந்து ைபக்காரா, கூடலூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இதன் காரணமாக ேகரள, கர்நாடகா சுற்றுலா பயணிகள் இச்சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இச்சாலையில் மேரிஸ் ஹில் செல்லும் சந்திப்பில் இருந்து காந்தல் முக்கோணம் வரை சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இவற்றில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.மேலும் சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சீராக வாகனங்களை இயக்க முடிவதில்லை. இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்து காட்சியளிக்கும் படகு இல்ல சாலையில் உள்ள பெரிய அளவிலான பள்ளங்களை மூடி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post குண்டும் குழியுமான படகு இல்ல சாலை appeared first on Dinakaran.

Related Stories: