தஞ்சாவூரில் புதிய உதயம் வனிதா கலர் டிஜிட்டல் போட்டோ ஆல்பம் தயாரிக்கும் நிறுவனம் திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், 2-வது தெரு, கவி பிளாசா, ஆரோக்கியா நகரில் வனிதா கலர் டிஜிட்டல் பிரஸ் என்கிற போட்டோ ஆல்பம் தயாரிக்கும் நிறுவன திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிறுவனமானது 44 வருட அனுபவம் பெற்றது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் அதிக கிளைகள் கொண்ட நிறுவனம் ஆகும். அதேபோல் இந்தியாவில் அதிக கிளை கொண்ட நிறுவனம் வனிதா கலர் டிஜிட்டல் பிரஸ் ஆகும். லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நல் ஆதரவுடன் இந்நிறுவனம் வெகு சிறப்பான லேட்டஸ்ட் ஆல்பம் வகைகளை சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரிண்டிங் பிரஸ் மிஷின் தஞ்சாவூருக்கு புது வரவு ஆகும். இதனால் இந்த மாவட்டத்திலுள்ள அனைத்து புகைப்பட கலைஞர்களுக்கும் திருப்தியாகவும் எளிமையாகவும் அமையும்.

The post தஞ்சாவூரில் புதிய உதயம் வனிதா கலர் டிஜிட்டல் போட்டோ ஆல்பம் தயாரிக்கும் நிறுவனம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: