நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த 2,400 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

ஈரோடு, ஜூன் 25: 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த 2,400 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தடைந்தது.
நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக கர்நாடாக மாநிலம் பெங்களூர் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியில் சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த லாரி நேற்று ஈரோடு ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிற்கு வந்தடைந்தது. இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் லாரியின் சீல் திறக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளை சோதனை செய்து, கிடங்கில் வைத்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி கூறுகையில், ‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக பேலட் இயந்திரம் 1,400, கண்ட்ரோல் யூனிட் 1,000 என 2,400 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ளது. இதனை கிடங்கில் வைக்கப்படும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக இயங்குகிறதா? என கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் சோதனை செய்யப்படும்’’ என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த 2,400 புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: