ஆயுதம், வெடிபொருள் கொள்ளை: மணிப்பூரில் சிபிஐ விசாரணை

 

புதுடெல்லி: மணிப்பூரில் ஆயுத கிடங்கில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ராணுவம் குவித்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 120 பேர் இதுவரை பலியாகி விட்டனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாட்கள் அங்கு தங்கி சமரச முயற்சி மேற்ெகாண்டதும் வெற்றி பெறவில்லை. அப்போது குற்ற சம்பவங்கள் தொடர்பான 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என்று அறிவித்தார். அதன்படி டிஐஜி தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அறிவிக்கப்பட்டது. அவர்கள் மணிப்பூர் சென்று நேற்று விசாரணை நடத்தினார்கள்.

இம்பால், சுராசந்த்பூரில் உள்ள ஆயுத கிடங்குகளுக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகத்தை சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் சென்ற போது பாங்கேய் அருகே பெண்கள் சாலை மறியல் செய்தனர். இருப்பினும் அவர்களை அப்புறப்படுத்தி விட்டு அவர்கள் தங்கள் ஆய்வு பணியை முடித்தனர். மேலும் மணிப்பூர் போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் கலவரம் நடந்த இடத்தையும் பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்தனர்.

The post ஆயுதம், வெடிபொருள் கொள்ளை: மணிப்பூரில் சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: