திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அரசு மாதிரி பள்ளியில் 11ம் வகுப்பிற்கு கலந்தாய்வு விண்ணப்பம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11ம் வகுப்பிற்கான விண்ணப்பங்களை கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பெயர் பட்டியல் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ,மாணவியருக்கான கலந்தாய்வானது அம்மையப்பனில் இயங்கி வரும் மேற்படி பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை கலெக்டர் சாரு வழங்கி பேசியதாவது, மாணவர் நலன் கருதி பல்வேறு வாய்ப்புக்களை தமிழக அரசு கல்வித்துறையில் வழங்கி வருகிறது. அதனை தன்னம்பிக்கையோடு பயன்படுத்தி அகில இந்தியஅளவில் நடைபெறும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும். கடந்த கல்வியாண்டில் என்.ஐ.எப்.டி தேர்வில் பங்கேற்ற 9 மாணவர்களில் நிரஞ்சன் என்ற மாணவர் அகில் இந்திய தரவரிசையில் 53-வது இடத்தினைப் பிடித்து சென்னை என்.ஐ.எப்.டி நிறுவனத்தில் சேருவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

அவர் உட்பட 7 மாணவர்களுக்குஅகில இந்தியஅளவில் உள்ள நிறுவனங்களுக்குரிய சேர்க்கைக் கட்டணம் ஒரு மாணவருக்கு தலா ரூ.ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 200 வீதம் செலுத்திஅதற்கான இட ஒதுக்கீட்டு ஆணையினையும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். மேலும் என்.ஐ.எப்.டி நிறுவனம் போபாலில் இடம் கிடைத்து சேருவதற்கு தயங்கிய மாணவர்களுடனும் கலெக்டர் சாரு கலந்துரையாடி ஆசிரியர்களோடு பேசி நல்லதொரு முடிவை எடுத்து எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவழிவகை காணுங்கள் என அறிவுரை வழங்கினார். நிகழ்வில் ஆர்.டி.ஓ சங்கீதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, பள்ளி தலைமையாசிரியர் விவேகானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அரசு மாதிரி பள்ளியில் 11ம் வகுப்பிற்கு கலந்தாய்வு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: