மேலும் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரும் ராமேஸ்வர பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது தான் மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் அச்சுறுத்தலால் தமிழக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு… எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை அத்துமீறல்!! appeared first on Dinakaran.