பாம்பிடம் சிக்கிய ‘பிள்ளை’யை மீட்க அணிலின் பாசப் போராட்டம்

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் ரயில் நிலைய மேற்கூரை தகர ஷெட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியில் அணில் ஒன்று கூடு கட்டி தனது பிள்ளையை பாதுகாத்து வந்தது. அப்பகுதியில் வெயில் கொளுத்தியதால் நிழலான இடம் தேடி அலைந்த சாரைபாம்பு ஒன்று ரயில் நிலைய மேற்கூரையில் ஏறி கூட்டிலிருந்த அணில் பிள்ளையை சட்டென்று விழுங்கியது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சூழலியல் ஆய்வாளரும், பாம்புபிடி நிபுணருமான பரமேஷ்தாசுக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த அவர், பாம்பை லாவகமாக பிடித்த அணில் பிள்ளையை பத்திரமாக மீட்டு பிளாட்பாரத்தில் விட்டார். தனது பிள்ளை பாம்பிடம் சிக்கியதிலிருந்து கீச், கீச் என்று கத்தியபடியே இருந்த தாய் அணில், அது மீட்கப்பட்டதும் பாசத்தோடு சுற்றி சுற்றி வந்த காட்சி அப்பகுதியில் நின்ற பயணிகளை நெகிழச்செய்தது.

The post பாம்பிடம் சிக்கிய ‘பிள்ளை’யை மீட்க அணிலின் பாசப் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: