ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரமான பூரியில் உள்ளது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் கோவில். இங்கு நேற்று தொடங்கிய தேர் திருவிழாவில் பக்தர்களின் வெள்ளத்திற்கு இடையே அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் வலம் வந்தனர். ஜெகன்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா என்ற பெயரிலான தேர்கள் பயன்படுத்தப்பட்டன.
The post ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.
