முதல்நாளான நேற்று மூலவர் ஜெகன்நாதர் 45 அடி உயர 16 சக்கர தேரிலும், சகோதரர் பாலபத்திரர் 44 அடி உயர 14 சக்கர தேரிலும், சகோதரி சுபத்ரா 43 அடி உயர 12 சக்கர தேரிலும் வலம் வந்தனர்.10 நாட்கள் நடைபெறும் விழாவில் தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் மூவரும் 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா ஆலயத்திற்குச் சென்று ஓய்வு எடுத்தனர். பின்னர் அங்கிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அவரை தேடி வரும் லட்சுமி தேவியுடன் புறப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வருவார் என்பது நம்பிக்கை.
The post பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் தொடங்கியது… லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.
