ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்

 

கோவை, ஜூன் 21: கோவை குருடம்பாளையம் கிராமம் ஐங்கம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் ஜூர்ணோத்தாரண ராஜத பந்தன கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி காலை 9.30 மணி 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு மங்கள இசை, சுப்ரபாதம், அக்னி ஆராதனம், கால சாந்தி, பிரதான ஹோமம், மகா பூர்ணஹீதி, யாத்திரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெறும்.

மேலும், ஸ்ரீஅரசமரத்து ஆனந்த விநாயகர் ஸ்ரீ சொர்ன காலபைரவர் நவக்கிரகம் மற்றும் ஸ்ரீசீதா சமேத ஸ்ரீராமச்சந்திர சுவாமி உட்பட அனைத்து விமானங்களும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் துவங்க உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துவங்க உள்ளது.

The post ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: