தலைமை காஜி அறிவிப்பு தமிழ்நாட்டில் வரும் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்

சென்னை: தமிழகத்தில் வரும் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதை தொடர்ந்து, வரும் 29ம் தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிவிப்பு: ‘‘துல்ஹஜ் மாத பிறை நேற்று முன்தினம் நாகூரில் காணப்பட்டது. ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 20ம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அல்ஹா (பக்ரீத்) 29ம் தேதி கொண்டாடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தலைமை காஜி அறிவிப்பு தமிழ்நாட்டில் வரும் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் appeared first on Dinakaran.

Related Stories: