அந்தமான் நிக்கோபருக்கு 3 நாள் பயணமாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சென்றார்

சென்னை: மூன்று நாட்கள் பயணமாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு சென்றார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணியளவில் போர்ட்பிளேயர் சென்றார். தொடர்ந்து, டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி போர்ட்பிளேயரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் மற்றும் அரசு நலத்திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இன்று காலை அந்தமான் நிக்கோபர் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச யோகா தினம் 2023ல் அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார். இதன் பின்னர் போர்ட்பிளேயர் நகரில் வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இன்று மாலை ஸ்வராஜ் தீவு பகுதியில் மீன் இறங்கும் மையத்தை பார்வையிடும் அமைச்சர் பின்னர் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் வீர சவார்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டுமான மற்றும் மேம்பாட்டு பணிகளை அவர் பார்வையிடுவார். இதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் உள்ளூர் நிகழ்ச்சிகளில் எல்.முருகன் பங்கேற்கிறார்.

The post அந்தமான் நிக்கோபருக்கு 3 நாள் பயணமாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: