ஆன்லைனில் செல்போன் ஆர்டர் வந்ததோ 3 சோப்பு கட்டி பார்சல்

வேலூர்: வேலூரில் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு 3 சோப்பு கட்டிகள் பார்சல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரங்களில் வேறு பொருட்கள் டெலிவரி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. போலியான பொருட்களும் டெலிவரி செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் ஆன்லைன் வர்த்தகத்தில் நம்பகத்தன்மை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஒருவர், ஸ்மார்ட் செல்போன் வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் ரூ.7,500 மதிப்பிலான செல்போன் வாங்க ஆர்டர் செய்தார். நேற்றுமுன்தினம் அவரது முகவரிக்கு டெலிவரி ஊழியர், ஒரு பார்சலை கொண்டு வந்தார். அந்த பார்சலை திறக்கும் முன்பு ஆர்டர் செய்த நபர் அதனை வீடியோ எடுத்தார். பின்னர் பார்சலை பிரித்தபோது சார்ஜர் மற்றும் ஹெட்செட் இருந்தது. ஆனால் செல்போனுக்கு பதில் பாத்திரங்கள் கழுவும் 3 சோப்பு கட்டிகள் இருந்தன. இதனால் ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார். செல்போனுக்கு பதில் சோப்பு கட்டிகள் இருந்ததால் அவர் ஆர்டரை ரத்து செய்து திருப்பி கொடுத்துவிட்டார்.

The post ஆன்லைனில் செல்போன் ஆர்டர் வந்ததோ 3 சோப்பு கட்டி பார்சல் appeared first on Dinakaran.

Related Stories: