குளச்சல் அருகே துணிகரம் கோயில் திருட்டை தடுக்க முயன்றவரை கொடூரமாக தாக்கிய கொள்ளையர்கள்

குளச்சல்,ஜூன் 18: குளச்சல் அருகே கோயிலில் திருட்டை தடுக்க முயன்றவரை கொள்ளையர்கள் கொடூரமாக தாக்கினர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளை கும்பல் 2 கோயில்களில் புகுந்து பணம், குத்துவிளக்குகளை திருடியதோடு, பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் செல்போனையும் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குளச்சல் அருகே வெட்டுமடையில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இது மேற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் நேற்று காலையில் புகுந்த மர்ம நபர்கள் கோயிலில் 3 பீடங்களில் வைத்திருந்த குத்து விளக்குகளை திருடி சென்றனர். பின்னர் அவர்கள் கோயில் அருகே கல்லால் ஆன உண்டியலை உடைக்க முயன்றனர்.

அப்போது அருகே பெட்டிக்கடை வைத்துள்ள கணேசன் (55) இதைக்கண்டு கூச்சலிட்டபடியே திருட்டை தடுக்க முயன்றார். ஆனால் திருட வந்த மர்ம நபர்கள் கணேசனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கணேசன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஊர்மக்கள் வந்துவிடுவார்கள் என பயந்துபோன மர்ம நபர்கள் உண்டியலை உடைக்காமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து இசக்கியம்மன் கோயில் பூசாரி வேலாயுதன் (61) வந்து பார்த்தபோது கோயிலில் குத்துவிளக்குகள் திருடப்பட்டிருப்பதையும், வெளியே கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனயில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குளச்சல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து துப்பு துலக்கி வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

The post குளச்சல் அருகே துணிகரம் கோயில் திருட்டை தடுக்க முயன்றவரை கொடூரமாக தாக்கிய கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Related Stories: