மாநில அளவிலான செஸ் போட்டி

கோவை, ஜூன் 18: தமிழ்நாடு செஸ் சங்கம், கடலுார் மாவட்ட செஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிதம்பரத்தில் நடந்தது. இதில், சென்னை, கோவை, மதுரை, திருநெல்வெளி, தூத்துக்குடி, ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 50 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கோவையை சேர்ந்த முத்துசாமி (53) 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று விளையாடிய ஆறு சுற்றுகளில் 5.5 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்தார்.

The post மாநில அளவிலான செஸ் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: