இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: பைனலில் லெபனானுடன் 18ம் தேதி இந்தியா மோதல்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இந்தியா, லெபனான், மங்கோலியா, வானுவாடு 4 நாடுகள் பங்கேற்றுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இரு ஆட்டங்களிலும் மங்கோலியா, வானுவாடு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் லெபனானுடன் நேற்று மோதுகிறது. பிபா தரவரிசையில் 99வது இடத்தில் உள்ள லெபனானுக்கு 101வது இடத்தில் உள்ள இந்தியா கடும் சவால் அளித்தது. முதல் பாதியில் கோல் எதுவும் இன்றி சமனில் இருந்தது.

2வது பாதியில் கோல் அடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால் கடைசி வரை கோல் எதுவும் அடிக்கபடவில்லை. இதனால் கோல்கள் இன்றி 0-0 என போட்டி சமனில் முடிந்தது. முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் வனுவாடு 1-0என மங்கோலியாவை வீழ்த்தியது. லீக்சுற்று முடிவில் இந்தியா 2வெற்றி, ஒரு டிரா என 7 புள்ளி, லெபனான் ஒரு வெற்றி, 2 டிரா என 5 புள்ளியுடன் முதல் 2இடங்களை பிடித்து பைனலுக்கு முன்னேறியது. நாளை மறுநாள் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பைனலில் இந்தியா-லெபனான் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

The post இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: பைனலில் லெபனானுடன் 18ம் தேதி இந்தியா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: