மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை தானமாக பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் 15வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

திருச்சி, ஜூன் 16: திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியும், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையும் இணைந்து நேற்று முன்தினம் வெற்றிகரமாக 15வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது. இந்த சிறுநீரகமானது மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 55 வயது ஒரு ஆண் நபரிடம் இருந்து சிறுநீரகம் கொடையாக பெறப்பட்டது. இந்த சிறுநீரகம் தொடர் இரத்த சுத்திகரிப்பு (Hemodialysis) சிகிச்சைப் பெற்று வந்த 47வயதுள்ள ஆண் நோயாளிக்கு திருச்சி அரசு மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது கல்லூரி முதல்வர் நேரு, தலைமையில், மருத்துவக் கண்காணிப்பாளர் அருண்ராஜ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சையில் சிறுநீரக மருத்துவக் குழுவை சேர்ந்த டாக்டர்கள் கந்தசாமி, பிரகாஷ், மைவிழி செல்வி, சிறுநீரக அறுவை சிகிச்சைக் குழு ஜெயபிரகாஷ் நாராயணன், ரவி, பரணி, சந்தோஷ்குமார், மயக்கவியல் மருத்துவக் குழு மருத்துவர்கள் சந்திரன், குணசேகரன், இனியன் மற்றும் செவிலியர் குழு அறுவை அரங்க செவிலியர்கள் ராஜராணி, சுமதி, வார்டு செவிலியர் சாரல்மேரி, ஞானாம்பாள், சரண்யா மற்றும் உதவியாளர் குழு ஆகியோர் ஈடுபட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், சிறுநீரகஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை தானமாக பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் 15வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: