கூட்டத்தில் முடிவு தோட்டக்கலை பண்ணையில் 1 லட்சம் பாக்கு மர நாற்றுகள்

 

சத்தியமங்கலம்,ஜூன்16: கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணை விடுத்துள்ள அறிக்கை: மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் அமைந்துள்ளது தமிழ்நாடு அரசு கல்லாறு தோட்டக்கலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. 123 ஆண்டு பழமை வாய்ந்த இந்த பண்ணையில் மித வெப்ப மண்டலங்களில் வளர கூடிய மங்குஸ்தான், ரம்பூட்டான், துரியன், பலா மற்றும் எலுமிச்சை கொய்யா உள்ளிட்ட பழ நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இப்பண்ணையில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தேவையான பாக்கு மர நாற்று உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கல்லாறில் அரசு தோட்டக்கலை பழ பண்ணையில் நான்கு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய மொஹித் நகர் 85000 எண்கள் மற்றும் மங்களா 20000 எண்கள் ரகத்தை சேர்ந்த பாக்கு மர நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு நாற்றின் விலை 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாற்றுகளை வாங்கி கொள்ளலாம் என பண்ணை மேலாளர் மோகன்ராம் தெரிவித்துள்ளார்.

The post கூட்டத்தில் முடிவு தோட்டக்கலை பண்ணையில் 1 லட்சம் பாக்கு மர நாற்றுகள் appeared first on Dinakaran.

Related Stories: