காளப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், நிழற்குடை

 

தொண்டாமுத்தூர், ஜூன் 12: கோவை அருகே சோமையம்பாளையம் ஊராட்சி காளப்ப நாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை எம்பி நடராஜன் ஆய்வு செய்தார். ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தில் அரசு ஆரம்ப சுகாதாரத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் ரூ.2 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் நிழற்குடை குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் ரூ.16 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்தார்.

முன்னதாக அவருக்கு சோமையம்பாளையம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் இரா.ஆனந்தகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் மாணிக்கம், அசோக், அருள், அஜித், பாலசந்திரன், சீனிவாசன், சிவசாமி, குமணன், பாண்டி, லட்சுமணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் துரை, மணி, சுகாதார ஆய்வாளர் பாலு, செவிலியர் கீதா மற்றும் பலர் வரவேற்றனர்.

The post காளப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், நிழற்குடை appeared first on Dinakaran.

Related Stories: