நீடாமங்கலம் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

 

நீடாமங்கலம், ஜூன் 11: நீடாமங்கலம் அருகே கிருஷ்ணாபுரத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. நீடாமங்கலம் அருகில் உள்ள முன்னாவல்கோட்டை ஊராட்சி கிருஷ்ணாபுரம் காலணி தெருவை சேர்ந்தவர்கள் சத்தியராஜ், பாக்கியராஜ், மணியன். இவர்களின் 3 பேரின் கூரை வீடுகளும் அருகருகே இருந்தது. இவர்கள் வயல் வேலைக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் நேற்று 3.45 மணியளவில் திடீரென ஒரு வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, காற்றில் தீ மள மளவென பரவி அருகில் உள்ள கூரை வீடுகளும் எரிந்து சாம்பலானது.தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.

இதனால் வீட்டில் இருந்த ஆவணங்கள், பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. பொருட்களின் சேத மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தகவலின் பேரில், நீடாமங்கம் தாசில்தார் பரஞ்ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பாதிப்படைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, தலா ரூ.5 ஆயிரம், வேட்டி, புடவை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள். தீ ஏற்பட்டதற்கான காரணத்தை நீடாமங்கலம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post நீடாமங்கலம் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.

Related Stories: