கறம்பக்குடி,ஜூன்11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பாக நகர்புற தூய்மை பணிகள் திட்டத்தின் கீழ் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் அறிவுறுத்தலின்படி பேரூராட்சி துணை தலைவர் நைனா முகமது மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் கறம்பக்குடி நகரில் தூய்மை பணிகள் செயல்படுத்தும் பணிகள் வாரம் தோறும் பகுதியில் நடைபெற்று வருகிறது.
நேற்று கறம்பக்குடி பேரூராட்சி அருகே உள்ள அரசு சுகாதார தலைமை மருத்துவமனை வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு மேம்படுத்தும் வகையில் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் அனைத்து தூய்மை பணியாளர்களும் ஒன்று சேர்ந்து வளாகத்தில் மண்டி கிடந்த புல், பூண்டு செடிகளை அகற்றி முழுவதும் தூய்மைப்படுத்தினர். இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்தையும், அரசையும் வெகுவாக பாராட்டினர்.
இந்த தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முருகேசன், துணை தலைவர் நைனா முகமது மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் முருகேஸ்வரி, செண்பக வள்ளி, ஜன்னத் பேகம், பரக்கத் நிஷா, பரிதா பேகம், ராஜசேகர் உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், மருத்துவனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மேஸ்திரி பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி தீவிரம் appeared first on Dinakaran.