நாகப்பட்டினம்,ஜூன்11: நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் நாகப்பட்டினம் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.
கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீர் இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு பாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும் விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் ஒரு மின் மோட்டார் பம்பு செட்டுக்கு 50 சதவீதம் மான்யமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுன்ள நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் (வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்), சாமந்தான் பேட்டை, தெற்கு பால்பண்ணைசேரி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை சிறு, குறு விவசாயி சான்றிதழ், பட்டா, சிட்டா அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.