தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு

 

தூத்துக்குடி, ஜூன் 11: தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 71 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மாவட்ட நீதிமன்றத்தில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல், அனைத்து வகையான சிவில், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு, காசோலை மோசடி, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 71வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 12 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ.39 லட்சத்து 73ஆயிரத்து 693 ஆகும். இதில், நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான(பொறுப்பு) பிஸ்மிதா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரைசெல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்துலெட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 12 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: