சாலையோரத்தில் குவிந்துள்ள மணலால் விபத்து

 

சிவகாசி, ஜூன் 11: விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் இன்றி பகல் நேரத்திலும் பல இருசக்கர வாகன ஓட்டிகளை திடீரென வாரி விடுவது மற்றும் தடுமாற செய்வதால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

சில நேரங்களில் சிறிய விபத்துக்கள் கூட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இந்த மணலை அப்புறப்படுத்தி வாகன விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோரத்தில் குவிந்துள்ள மணலால் விபத்து appeared first on Dinakaran.

Related Stories: