கண்மாய் பகுதியில் தற்கொலை செய்த வாலிபர் எலும்பு கூடு: போலீஸ் விசாரணையில் தகவல்

 

பரமக்குடி, ஜூன் 11: பரமக்குடி அருகே கண்மாய் பகுதியில் கிடந்த எலும்புக்கூடு தற்கொலை செய்தவரின் எலும்பு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கவிதைகுடி கிராமம். அந்தப் பகுதியில் உள்ள கண்மாய்க்கு செல்லும் வழியில் அடர்ந்த கருவேலம் மரங்கள் உள்ளன. அப்பகுதியில் மனித எலும்புக்கூடு தொடை, மண்டை ஓடு கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சத்திரக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு கிடந்த எலும்புக் கூட்டை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த எலும்புக்கூடுகளின் அருகில் ஊதா நிற சட்டையும், உடைந்த நிலையில் செல்போனும் கிடந்தது. அதனை கைப்பற்றி, எலும்பு கூடாக கிடந்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் முதுகுளத்தூர் தாலுகா பெரிய கையகம் அழகர்சாமி (34) என்பதும் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சத்திரக்குடி அருகே உள்ள தீயனூர் கிராமத்தில் உள்ள தனது சின்னம்மா வீட்டி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.தொடர்ந்து வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் அழகர் சாமி கடந்த 5 தினங்களுக்கு முன்பு கருவேலும் மரங்கள் உள்ள கண்மாய் பகுதியில் மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கண்மாய் பகுதியில் தற்கொலை செய்த வாலிபர் எலும்பு கூடு: போலீஸ் விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: