பயிர் காப்பீடு வழங்க கோரி மீண்டும் காத்திருப்பு போராட்டம்

திருவாடானை, ஜூன் 11: கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மீண்டும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை பெரிய கோயிலில் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2022-2023 ஆண்டு பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடும் வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே வருகிற ஜூலை 3ம் தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது. இந்த போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி ஆதரவை பெறுவதும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகளை பெறுவது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு என்பதை ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு என பெயர் மாற்றம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post பயிர் காப்பீடு வழங்க கோரி மீண்டும் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: