மதுரையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.15.99 லட்சம் நிதி

மதுரை, ஜூன் 11: மதுரையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த காலவர் குடும்மபத்திற்கு சக போலீசார் ரூ.15.99 லட்சம் நிதியுதவி வழங்கினர். மதுரையில் கடந்த 27ம் தேதி உடல் நலக்குறைவால் காலமான தெப்பக்குளம், குற்றப்பிரிவு காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மணிகண்டன் என்பவரின் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு, அவருடன் 2010ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்களின் காக்கும் கரங்கள் குழு சார்பில் ரூ.15 லட்சத்து 99 ஆயிரத்து 68 நிதி திரட்டப்பட்டது.

இந்த தொகை, மதுரை நகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் முன்னிலையில் இறந்த மணிகண்டனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. அப்போது, துணை கமிஷனர்கள் பிரதீப், மங்களேஸ்வரன் உடனிருந்தனர். மேலும், 2010 காக்கும் கரங்கள் குழுவைச் சேர்ந்த காவலர்கள், இதுவரை பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பத்தினருக்கு, குடும்ப நல நிதியாக ரூ.1 கோடியே 59 லட்சத்து, 67 ஆயிரம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுரையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.15.99 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Related Stories: