கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி கள்ளிமந்தையத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

ஒட்டன்சத்திரம், ஜூன் 11: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி கள்ளிமந்தையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பொன்ராஜ், ஒன்றிய பெருந்தலைவர் சத்தியபுவனா, துணைபெருந்தலைவர் தங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிகரசுதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஊராட்சி செயலர் கோதண்டராமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் ராஜேஷ், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜ்குமார், முருகன் உள்ளிட்ட கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி கள்ளிமந்தையத்தில் நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: