2 விமானம் தாங்கிகள் 35 போர் கப்பல்களுடன் கடற்படை மெகா பயிற்சி

புதுடெல்லி: இந்திய கடற்படையின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 2 விமானம் தாங்கி கப்பல்கள், 35 போர் கப்பல்களுடன் மிகப்பெரிய போர் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல் அதிகாரித்து வருகின்றது. இந்நிலையில் இந்திய கடற்படையின் வலிமை மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் அரபிக்கடலில் மிகப்பெரிய போர் ஒத்திகை பயிற்சியை இந்திய கடற்படை நடத்தியுள்ளது. இந்த பயிற்சியில் கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, புதிதாக சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், மிக் 29கே, எம்எச்60ஆர் ஹெலிகாப்டர்கள், காமோவ் மற்றும் இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 35 போர் கப்பல்கள் பங்கேற்றன.

ஐஎன்எஸ் விக்ராந்த் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களுடன் நடத்தப்படும் மிகப்பெரிய பயிற்சி இதுவாகும். இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டனர் விவேக் மாத்வால் கூறுகையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவற்கான இந்திய கடற்படையின் முயற்சியில் இந்த பயிற்சி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது” என்றார்.

The post 2 விமானம் தாங்கிகள் 35 போர் கப்பல்களுடன் கடற்படை மெகா பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: