செம்பட்டியில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு

 

நிலக்கோட்டை, ஜூன் 10: செம்பட்டி நகர் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் பஸ் நிலைய பின்புறம் உள்ள கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். நேற்று இந்த குப்பை கிடங்கிற்கு, மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து விட்டனர். இந்த தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவி பற்றி எரிந்தது.

இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அப்பகுதி மக்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுத்து, ஊருக்கு வெளியே வேறு ஒரு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குப்பைக்கு தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செம்பட்டியில் குப்பை கிடங்கிற்கு தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: