மீன் பிடித்த பின் வலை சீரமைத்த மீனவர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல்

திருவாரூர், ஜூன் 9: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் மூலம் ஊரக பகுதிகளுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 10 எண்ணிக்கையிலான உறுப்பினர்களும், நகர்புற பகுதிகளுக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 2 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெளியிட்டுள்ளார். தொடர்புடைய ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சிகளின் அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை (10ம் தேதி) வரை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியரகம் 2வது தளம் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்க அறையில் தாக்கல் செய்யலாம். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் 12ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுவை 14ம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம். 23ம் தேதி வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியரகத்தில் 2வது தளத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். இத்தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் 24ம் தேதிக்கு முன்பாக முடிவுறும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post மீன் பிடித்த பின் வலை சீரமைத்த மீனவர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: