ஒப்பிலியப்பன் கோயில் கும்பாபிஷேகம் அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டம்

திருவிடைமருதூர், ஜூன் 9: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனைத்துத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது. ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 29ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கோயில் வளாகத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கும்பகோணம் ஆர்டிஓ பூர்ணிமா தலைமை வகித்தார். கோயில் உதவி ஆணையர் சாந்தா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் வருவாய், காவல், தீயணைப்பு, மின்சாரம், போக்குவரத்து, பேரூராட்சி, சுகாதாரம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர், கழிவறை, பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற வசதிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

The post ஒப்பிலியப்பன் கோயில் கும்பாபிஷேகம் அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: