அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் கல்வி பயின்று அரசு தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஜூன்9: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பிளாசம்-அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் கல்வி பயின்று, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் செயல்படும் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டுவரும் பிளாசம், அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் கல்வி பயின்று வந்த பாண்டிமீனா, அகரப்பட்டியைச் சேர்ந்தவர் மற்றும் மணிமாறன், திருவப்பூரை சேர்ந்தவர். இந்த இரண்டு மாணவர்களும் கடந்த 2022-2023ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றானர்.

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சிறப்புப் பள்ளியின் இயக்குநர் குழந்தைதாஸ், சிறப்பாசிரியர்கள் லலிதா, வனிதா, இயன்முறை மருத்துவர் பிரியதர்ஷினி மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

The post அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் கல்வி பயின்று அரசு தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: