நெல்லை அருகே மாணவர்கள் மீது தாக்குதல்

நெல்லை, ஜூன் 9: பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று மாலை டியூசன் படிப்பதற்காக கீழப்பாவூருக்கு சென்றுள்ளனர். அப்போது சிலர் அவர்களை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் காயமடைந்ததாக கூறி தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் அங்குள்ள முப்புடாதி அம்மன் கோயில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தென்காசி மாவட்ட எஸ்பி சாம்சன், ஆலங்குளம் டிஎஸ்பி பர்னாட், ஏடிஎஸ்பி தெய்வம், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்தராதேவி, தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் மேலப்பாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லை அருகே மாணவர்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: