ஒடிசா ரயில் விபத்து குறித்து மத பிரச்னையை ஏற்படுத்த முயன்ற பாஜ வக்கீல் கைது

நாகர்கோவில்: ஒடிசா ரயில் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய பாஜ வக்கீலை போலீசார்கைது செய்தனர். ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2ம் தேதி நடந்த ரயில் விபத்தில் 275 பேர் இறந்தனர். இந்நிலையில், பாஜ சட்டப்பிரிவு உறுப்பினர் செந்தில் குமார் என்பவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300க்கும் மேற்பட்டோரை கொன்றது மற்றும் 900க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தது என்ற வாசகத்துடன் விபத்து நடந்த பஹானாகா ரயில் நிலையம். ரயில் நிலையத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பது போன்ற புகைப்படம், மத சாயம் பூசப்பட்ட பெயரும் பதிவிடப்பட்டிருந்தது.
ஒடிசா ரயில் விபத்துக்கு ஸ்டேஷன் மாஸ்டர் காரணம், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் இருந்து ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படிருந்தது. இந்த பதிவு சிறிது நேரத்தில் வைரலானது. செந்தில்குமார் டிவிட்டரில் பகிர்ந்திருந்த ஸ்டேஷன் மாஸ்டர் படம் 2004ல் எடுக்கப்பட்டது. விபத்து நடந்த நிலையத்தில் அன்று பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் எஸ்.பி.மொகந்தி ஆவார். இந்நிலையில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பி பதிவு வெளியிட்டதாக செந்தில்குமார் மீது திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தக்கலை போலீசார் செந்தில்குமார் மீது கலவரம் செய்ய தூண்டுதல், மதம், இனம், ஜாதி அல்லது சமூக அடிப்படையில் எழுதி வெறுப்புணர்வை தூண்டுதல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.

The post ஒடிசா ரயில் விபத்து குறித்து மத பிரச்னையை ஏற்படுத்த முயன்ற பாஜ வக்கீல் கைது appeared first on Dinakaran.

Related Stories: