பூவனூர் தட்டித்தெரு-கொத்தமங்கலம் இடையே கோரையாற்றில் புதிய பாலம் கட்டும் பணி

திருவாரூர், ஜூன் 8: பூவனூர் தட்டித்தெரு-கொத்தமங்கலம் இடையே கோரையாற்றில் புதிய பாலம் கட்டும் பணியை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நீடாமங்கலம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.70.79 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டிடத்தையும், பூவனூர் தட்டி-கொத்தமங்கலம் இடையே கோரையாற்றில் குறுக்கே ரூ.276.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பால பணிகயையும், ராயபுரம் பகுதியில் ரூ.17.27லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு நடுக் கன்னி வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இதேபோல, ரூ.7.49 லட்சத்தில் கீழப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை, புள்ளவராயன் குடிகாடு பகுதியில் ரூ.8.29 லட்சத்தில் ஊராட்சி ஒற்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணி நடை பெறுவதையும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து எடமேலையூர் கிராமத்தில் ரூ.2.40 லட்சத்தில் பிரதமர் மந்திரிகுடி யிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளையும், ரூ.7.87 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் தளத்தையும், ரூ.6.86 லட்சம் மதிப்பீட்டில், மரக்கன்றுகள் நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும் , ரூ.32.73 லட்டம் மதிப்பீட்டில் எடமேலையூர் நடுத்தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் பள்ளியை பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்திட அலு வலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில் நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தாசில்தார், பரஞ்ஜோதி,வட்டார,வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன்,நமச்சுவாயம் ,ஒன்றிய,பொறி யாளர்கள்,அரசு அதிகாரிகள் ,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

The post பூவனூர் தட்டித்தெரு-கொத்தமங்கலம் இடையே கோரையாற்றில் புதிய பாலம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: