கந்தர்வகோட்டை, கறம்பக்குடியில் மிதமான மழை

கந்தர்வகோட்டை, ஜூன்8: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் போதிய மழை இன்றி கடும் வெயிலால் புல் பூண்டுகள் கருகியும், விவசாய பயிர்கள் காய்ந்தும் அனைத்து குளங்கள் வறண்ட நிலையில் உள்ளன.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் மாலை நேரங்களில் மழை வரும் சூழ்நிலையுடன் வானில் மேக கூட்டங்கள் கருத்த மேகங்கள் ஒன்று திரண்டு காணப்படுவதும், மழை வராமல் போவதும் உள்ள நிலையில் உள்ளது. நேற்று ( 7ம் தேதி) மாலை லேசான மழை தூறலுடன் மழை பெய்த போது வானத்தில் கருமேகம் கூட்டங்கள் ஒன்று திரண்டு கந்தர்வகோட்டை பகுதியே இருண்டு காணப்பட்டது. காற்றும் சேர்ந்து அடித்ததால் மழை வரும் என்று ஆவலுடன் விவசாயிகள் பொதுமக்கள் வானத்தை பார்த்த நிலையில் இருந்தனர். இந்த நிலையில் மழை லேசாக பெய்தது.

விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மழை பெய்ததால் மாலை நேர வெப்பம் பெரிதும் தணிந்தது. சாலை ஓரங்களில் நீண்ட நாட்களுக்கு பின் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இப்பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டிய நிலையில் மழை பெய்ததில் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சதம் அடிக்கும் வகையில் வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் வெயிலில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு வெயிலின் தாக்குதலுக்கு ஆளாகி வீட்டிற்குள்ளே முடங்கிகிடந்தனர் . இந்நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு இடி இடித்து காற்று வீச தொடங்கியது. பின்னர் இரவு 7.30 மணி முதல் காற்றுடன் கன மழை சுமார் அரைமணி நேரம் வெளுத்து வாங்கியது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்தது. பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post கந்தர்வகோட்டை, கறம்பக்குடியில் மிதமான மழை appeared first on Dinakaran.

Related Stories: