கிச்சன் டிப்ஸ்

* சுண்டலுக்கு கொண்டைக்கடலை ஊற வைக்கும்போது சிறிது சமையல் சோடா கலந்து, பின்னர் நன்றாக கழுவிவிட்டு வேறு தண்ணீரில் வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* ரவா லட்டு, மாலாடு என்றால் தொட்டவுடன் உதிரும். அந்த லட்டுகளை ஒருநாள் ஃபிரிட்ஜில் வைத்திருந்து பேக் செய்தால் சீக்கிரம் உதிராது.
* மோர்க்குழம்பு புளிப்பு குறைவாக இருந்தால் ஒரு மாங்காயை தோல் சீவி, பொடியாக நறுக்கி வேக வைத்து மோர்க்குழம்புடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* மோர்மிளகாய் வற்றல் போடும்போது, சிறிது வெந்தயத்தை அரைத்து மோரில் கலந்து, அதில் மிளகாயை ஊறவைத்தால் காய்ந்தவுடன் வெண்மையாகவும், வறுத்தவுடன் சுவையாகவும் இருக்கும்.
* அப்பம், சப்பாத்தி, வடை, போண்டா அதிரசம் மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால், ஃப்ரீஸரில் 20 அல்லது 30 நிமிடங்கள் திறந்தபடி வைத்தால் கெட்டியாகும். உடனே சமைக்கலாம்.
* உலர்திராட்சை, அத்திப்பழம் போன்ற காய்ந்த பழங்களை வைத்திருக்கும் டப்பா வில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் ருசி மாறாமல் இருக்கும்.
* வெங்காய வடகத்தை வெறும் வாணலியில் லேசாக சூடாக்கிவிட்டு, பிறகு எண்ணெய்யில் பொரித்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.
*தயிர்வடைக்கு வடை சுட்டதும் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
* மைதா மாவை நீர்விட்டு பிசையாமல் நீராவியில் வேக வைத்து தேவையான உப்பு, நெய் கலந்து பிசைந்து முறுக்கு பிழிந்தால் நல்ல கரகரப்பாக இருக்கும்.
* புலாவ், பிரிஞ்சி, பிரியாணி செய்யும்போது அரிசி முக்கால்பாகம் வெந்ததும் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்தால் ஒன்றோடு ஒன்று அரிசி ஒட்டாமல் மணமாகவும் இருக்கும்.
* சுண்டை, மணத்தக்காளி வற்றல்களை வெயிலில் நன்கு காய வைத்தால் அதிகப்படியான உப்பும், மண்ணும் உதிர்ந்துவிடும். எண்ணெயில் வறுக்கும்போது அதிகம் கசடும் வராது.
* உப்பு ஜாடியில் சிறிது சோள மாவைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாமலிருக்கும்.- யாழினி பர்வதம், சென்னை.
* இட்லி மாவு புளிக்காமல் இருக்க, வெற்றிலையை மாவில் குப்புறப் போடவும். மாவு புளிக்கவோ, பொங்கி வழியவோ செய்யாது.
* உருளைக்கிழங்குத் தோலில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. தோலை உரித்துச் சமைக்க வேண்டாம்.
* காலிப்ஃபளவரை வேக வைக்கும்போது, சிறிது பால் சேர்த்தால் வெந்த பிறகும் வெண்ணிறமாய் இருக்கும்.
* அப்பளம் வறுக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து, அதில் அப்பளம் பொரித்தால் சுவையாகவும். நல்ல நிறமாகவும் இருக்கும்.
* மிளகாய் வற்றலை வறுக்கும்போது சிறிது உப்பையும் சேர்த்து வறுத்தால் காரநெடி மூக்கைத் துளைக்காது.
* எந்த வகை சுண்டலாக இருந்தாலும் தேங்காய்த் துருவலுக்குப் பதில் கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்தால் சுவையாக இருக்கும். பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும்.
* முறுக்கு, சீடை, தட்டை போன்றவற்றை வைக்கும் டப்பாவில், உப்பைத் துணியில் முடிந்து போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.– அமுதா அசோக்ராஜா
* எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்பொழுது எண்ணெய்க் காறல் இல்லாமல் இருக்க கொதிக்கும் எண்ணெயில் கொஞ்சம் புளியை சேர்த்து கரியவிட்டு பின் எடுத்துவிட்டு அதன்பின்பு உணவுப் பண்டங்களை பொரித்து எடுத்தால் காறல் இருக்காது.
* முற்றிய பாகற்காயாக இல்லாமல் பார்த்து எடுத்து சிறுசிறு வில்லைகளாக நறுக்கி அதனை எலுமிச்சைச் சாற்றில் போட்டு ஊறவைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் நன்கு ஊறிய பின்பு அவ்வப்போது குலுக்கி வெயிலில் போட்டுகாய வைத்து எடுத்துப் பாருங்கள். கொஞ்சம்கூட கசப்பு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
* இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி அரைக்கும்போது கடைசியாக தாளிக்க கொஞ்சம் நல்லெண்ணெயும், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்துப் பாருங்கள், ருசி அதிகமாக இருக்கும்.– பா.பரத், கோவிலாம்பூண்டி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: