ஒடிசா ரயில் விபத்தில் பலி முத்துப்பேட்டையில் மெழுகுவர்த்தி அஞ்சலி

 

முத்துப்பேட்டை, ஜூன் 7: முத்துப்பேட்டையில் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், மாவட்ட அமைப்பு செயலாளர் நெய்னா முகமது, மாவட்ட செயலாளர் சுந்தரராமன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, எஸ்சிஎஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ஜேம்ஸ், நகர துணைத்தலைவர் ஹசன், நகர பொருளாளர் குலாம் ரசூல், நகர செயலாளர் நாசர், நகர சேவாதள தலைவர் ரமேஷ் குமார், நிர்வாகிகள் கபீர் மற்றொரு கபீர், இஜாஸ், அப்துல் ரஹ்மான் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

The post ஒடிசா ரயில் விபத்தில் பலி முத்துப்பேட்டையில் மெழுகுவர்த்தி அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: