இளம் கன்று பயமறியாது.. பாம்பை வாயில் போட்டு கடித்து துப்பிய சிறுவன்

பரூக்காபாத்: உ.பி. மாநிலம் பரூக்காபாத் பகுதியில் 3 வயது அக்‌ஷய் என்ற குழந்தை தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டு அருகே உள்ள புதரில் இருந்து ஒரு சிறிய பாம்பு வெளிப்பட்டு அவர் முன் வந்தது. சிறுவனுக்கு அது பாம்பு என்பது தெரியாது என்பதால் எந்தவித பயமும் இல்லாமல் அதை பிடித்து வாயில் போட்டு மென்று தின்றான். அப்போது அக்‌ஷய்யை காண அவனது பாட்டி வெளியே வந்தார்.

அப்போது சிறுவனின் வாயில் பாம்பு சிக்கியதைக் கண்டு குழந்தையின் பாட்டி பதறி பாம்பை வெளியே எடுத்து வீசினார். பாம்பு செத்துக்கிடந்தது. இதையடுத்து உடனே அக்‌ஷய்யை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இளம் கன்று பயமறியாது.. பாம்பை வாயில் போட்டு கடித்து துப்பிய சிறுவன் appeared first on Dinakaran.

Related Stories: