நேருக்கு நேர்…

* இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 106 டெஸ்ட்களில் ஆஸி. 44 போட்டியிலும், இந்தியா 32 போட்டியிலும் வென்றுள்ளன. 29 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளன. சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் சரிசமனில் (‘டை’) முடிந்தது.

* இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 1947ல் இருந்து டெஸ்ட் தொடர்களில் மோதி வருகின்றன. இதுவரை நடந்த 28 தொடர்களில் ஆஸி. 12 தொடர்களையும், இந்தியா 11 தொடர்களையும் கைப்பற்றி உள்ளன. 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

* 1996க்கு பிறகு இந்த 2 நாடுகளுக்கு இடையே பார்டர்-கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் டெஸ்ட் தொடர்கள் நடக்கின்றன. அப்படி கடைசியாக நடைபெற்ற 16 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 10 தொடர்களிலும், ஆஸி. 5 தொடர்களிலும் வெல்ல, ஒரு தொடர் டிராவாகி உள்ளது.

* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 10 டெஸ்ட்களில் இந்தியா 5 டெஸ்ட்களிலும், ஆஸி 2 டெஸ்ட்களிலும் வென்றுள்ளன. எஞ்சிய 3 போட்டிகள் டிராவில் முடிந்தன. கடைசியாக கடந்த மார்ச் மாதம் அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில்…
* இங்கிலாந்தில் இதுவரை 176 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா விளையாடி உள்ளது. அவற்றில் தலா 54 வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. 68 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

* இங்கிலாந்து மண்ணில் இந்தியா 68 டெஸ்டில் களம் கண்டுள்ளது. அதில் 9 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 37 தோல்வியையும், 22 டிராவையும் சந்தித்துள்ளது.

* பைனல் நடக்கும் லண்டன், ஓவல் அரங்கில்… ஆஸ்திரேலியா 38 டெஸ்ட்களில் விளையாடி 7 வெற்றி, 17 தோல்வி, 14 டிரா கண்டுள்ளது. இந்தியா 14 டெஸ்ட்களில் களமிறங்கி 2 வெற்றி, 5 தோல்வி, 7 டிரா கண்டுள்ளது.

The post நேருக்கு நேர்… appeared first on Dinakaran.

Related Stories: