சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அண்ணா சாலையில் புதிய பூங்கா அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட அண்ணா சாலையில் புதிய பூங்கா அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, எல்.டி.ஜி. சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.30.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டடம் மற்றும் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட அண்ணா சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மேயர் மகேஷ்குமாரின் 169வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், எல்.டி.ஜி. சாலை மற்றும் வேளச்சேரி பிரதான சாலையில் முறையே ரூ.14.50 லட்சம் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டடம் மற்றும் நியாயவிலைக் கடைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

எல்.டி.ஜி. சாலையில் அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் 1595 குடும்ப அட்டைதாரர்களும், வேளச்சேரி பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் 415 குடும்ப அட்டைதாரர்களும் பயன் பெறுவார்கள். இந்நிகழ்ச்சிகளில், மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக்குழுத் தலைவர் திரு.இரா.துரைராஜ் அவர்கள், திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அண்ணா சாலையில் புதிய பூங்கா அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: