கலெக்டர் வழங்கினார் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 323 மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை புதுகை கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன்6: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 323 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், விபத்து மரணத்திற்கான நிதியுதவித் தொகையாக ரூ.1,00,000, ஒரு பயனாளிக்கும் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவித் தொகையாக தலா ரூ.17,000 வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ.3,40,000க்கான காசோலைகளையும், ரூ.7,500 மதிப்பிலான உதவி உபகரணங்கள் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.4,47,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கலெக்டர் வழங்கினார் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 323 மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை புதுகை கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: