அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 

ராமநாதபுரம், ஜூன் 6: ராமநாதபுரம் பட்டணம்காத்தான் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ராமநாதபுரம் பட்டணம்காத்தன் அருகே கிருஷ்ணா நகரில் மகா மாரியம்மன், விநாயகர் மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.

முதல்காலம் முதல் நான்கு கால பூஜைகள் வரை நடத்தப்பட்டு யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு கோயில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு சாமி விக்கிரத்திற்கு பால்,மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. மாலையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

The post அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: