நெல்லை மாவட்டத்தில் 21 பிடிஓக்கள் அதிரடி மாற்றம் ஒருவருக்கு பதவி உயர்வு

நெல்லை, ஜூன் 6: ஊரக வளர்ச்சித் துறையில் நெல்லை மாவட்டத்தில் பிடிஓக்கள் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்தில் உள்ள பணியிடங்களில் பணியாற்றி வரும் 21 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரம் வருமாறு: பாளையங்கோட்டை பிடிஓ (கிராம ஊராட்சி) பொன்ராஜ் அதே யூனியனில் வட்டார ஊராட்சிக்கும், இந்த பணியில் இருந்த பாலசுப்பிரமணியன் அதே யூனியனில் கிராம ஊராட்சிக்குக்கும், நெல்லை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக பிடிஓ (நிர்வாகம்) சுசீலா பீட்டர் மானூர் பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி), இந்த பணியில் இருந்த முத்துகிருஷ்ணன் நெல்லை உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலக பிடிஓவாகவும், இந்த பணியில் இருந்த கோபாலகிருஷ்ணன் களக்காடு பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி), இந்த பணியில் இருந்த முத்தையா வள்ளியூர் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இப்பணியில் இருந்த கண்ணன் அதே வள்ளியூர் யூனியனில் வட்டார ஊராட்சிக்கும், இந்த பணியில் இருந்த மங்களம் என்ற கோமதி களக்காடு பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இந்த பணியில் இருந்த மணி மானூர் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இந்த பணியில் இருந்த மங்கையர்க்கரசி பாப்பாக்குடி பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர்.

இப்பணியில் இருந்த சங்கரகுமார் நாங்குநேரி பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி), இந்த பணியில் இருந்த முருகன் அம்பாசமுத்திரம் பிடிஓவாகவும் (வட்டார ஊராட்சி), இந்த பணியில் இருந்த ராஜம் சேரன்மகாதேவி பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இந்த பணியில் இருந்த விஜயசெல்வி நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிடிஓவாகவும் (டான்பிநெட்), இந்த பதவியில் இருந்த நடாராஜன் ராதாபுரம் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இந்த பணியில் இருந்த ராஜேஸ்வரன் பாப்பாக்குடி பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இப்பணியில் இருந்த பாலசுப்பிரமணியன் நெல்லை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக பிடிஓவாகவும் (நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளனர்.

அம்பாசமுத்திரம் பிடிஓ (கிராம ஊராட்சி) காந்த் நாங்குநேரி பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி), இந்த பணியில் இருந்த கிஷோர்குமார் நெல்லை மாவட்ட ஊரக வளர்்ச்சி முகமை பிடிஓவாகவும் (ஊரக வேலை உறுதித்திட்டம்), இந்த பணியில் இருந்த னிவாச சுடலைமுத்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கண்காணிப்பாளராகவும், சேரன்மகாதேவி பிடிஓ (வட்டார ஊராட்சி) பொன்னுலெட்சுமி அம்பாசமுத்திரம் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சி) மாற்றப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் துணை பிடிஓ (தணிக்கை) மகாராசி பதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி பிடிஓவாக (வட்டார ஊராட்சி) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.

The post நெல்லை மாவட்டத்தில் 21 பிடிஓக்கள் அதிரடி மாற்றம் ஒருவருக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: