சந்திரபாபு மற்ற கட்சிகளையே நம்பி உள்ளார் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி: ஒய்எஸ்ஆர் காங். அமைச்சர் தகவல்

திருமலை: சந்திரபாபு மற்ற கட்சிகளையே நம்பி உள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி என மின்சாரம், வனம், சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ராமசந்திரா தெரிவித்தார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் ஆந்திர மாநில மின்சாரம், வனம், சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ராமசந்திரா கூறியதாவது: ‘கடந்த சில நாட்களாக ஆந்திராவில் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால், அது முற்றிலும் தவறான தகவல். ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை. அடுத்த ஆண்டு தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் பலமாக அமைந்துள்ளது. எனவே மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமும், தேவையும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு இல்லை. எங்கள் கூட்டணி மக்களிடம் மட்டுமே. நாங்கள் செய்த நல்லாட்சிக்கு மக்கள் நலத்திட்டம் தான் எங்கள் அரசியல் கூட்டணி. ஆனால் மற்ற கட்சிகளை நம்பிதான் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு உள்ளார்’ என கூறினார்.

The post சந்திரபாபு மற்ற கட்சிகளையே நம்பி உள்ளார் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் மட்டுமே கூட்டணி: ஒய்எஸ்ஆர் காங். அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: