வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள் உதய கருட சேவை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மன்னார்குடி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள் உதயகருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களின் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள், கோபிநாதன் பெருமாள் சகிதமாக வைகுண்ட நாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி உதய கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைமுன்னிட்டு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு, பாமணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சென்றார். அது போல் மன்னார்குடி இரட்டை குளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோபிநாதன் பெருமாள் கோயிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு கைலாசநாதர் கோயிலுக்கு வந்தார். பின்னர், பெருமாள், கோபிநாதன் பெருமாள் சகிதமாக வைகுண்ட நாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி உதய கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பத்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

The post வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள் உதய கருட சேவை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: