திருக்காட்டுப்பள்ளியில் காவிரி, குடமுருட்டி ஆற்றுப்பாலங்களுக்கு வர்ணம் பூசும் பணி

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி காவிரி, குடமுருட்டி ஆற்றுப்பாலங்களுக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருக்காட்டுப்பள்ளியில் காவிரி, குடமுருட்டி ஆறுகள் செல்கின்றன. வருடா, வருடம் மேட்டூரில் ஜூன் மாதம் தண்ணீர் திறப்பிற்கு முன், பாலத்தில் உள்ள சட்ரஸ் மற்றும் தண்ணீர் திறப்பிற்கு பயன்படும் இயந்திரம் ஆகியவற்றை பராமரிப்பு செய்தும் பாலத்தின் மேல்பகுதியில் வர்ணம் பூசும் பணியும் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு வரும் 12ம்தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி மற்றும் குடமுருட்டி ஆற்றுப்பாலத்தின் சுவர்களில் வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருக்காட்டுப்பள்ளியில் காவிரி, குடமுருட்டி ஆற்றுப்பாலங்களுக்கு வர்ணம் பூசும் பணி appeared first on Dinakaran.

Related Stories: